என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்ப பூஜை
  X

  அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்ப பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மயான கொள்ளை திருவிழா ஒரு வாரம் நடைபெற்றது.
  • சிறப்பு பிரசாதம் மற்றும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

  தருமபுரி,

  தருமபுரி, அன்னசாகரம் நடுவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா ஒரு வாரம் நடைபெற்றது.

  விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளை தொடர்ந்து மயானம் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன. விழாவின் கடைசி நாளான நேற்று இரவு கும்ப பூஜை செய்யப்பட்டது.

  இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

  இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கும்ப பூஜையில் வைக்கப்பட்ட சிறப்பு பிரசாதம் மற்றும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

  இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×