search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம்  அரசு பள்ளிகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு
    X

    ஆர்.டி.ஓ. கவுசல்யா ஆய்வு செய்த காட்சி.

    குமாரபாளையம் அரசு பள்ளிகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு

    • திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • ஆதி திராவிடர் விடுதியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், ஒருவருக்கு மட்டும் தூய்மைப்பணி செய்து வருவதற்கு மட்டும் சம்பளம் கொடுக்கபட்டு வருகிறது என்பதையும் கேட்டறிந்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதையடுத்து திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் அருகே உள்ள கோம்பு பள்ளம், ஆக்கிரமிப்பால் குறுகியதாக மாறியதால், கோம்புபள்ளத்தின் நீர் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நுழைகிறது. இந்த தண்ணீர், கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட துளையின் வழியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைகிறது.

    இந்த பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று ஆர்.டி.ஓ கூறினார். மேலும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பாலும் கோம்பு பள்ளம் நீர் நுழைகிறது.

    மாணவிகள் கழிப்பிடப் பகுதியில் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால், மாணவிகள் சங்கடம் போக்க சுற்றுச்சுவர் உயரம் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் கூறினர்.

    இந்த ஆய்வின் போது, ஒரு வகுப்பில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் விளையாடிக்கொண்டு இருப்பதை பார்த்து அந்த வகுப்பறைக்கு சென்றார். மாணவர்களிடம் கேட்டபோது தமிழ் பாட வகுப்பு என்பதும் ஆசிரியர் வரவில்லை என்பதும் தெரியவந்தது. இது குறித்து உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜிடம் கேட்டபோது, தமிழ் ஆசிரியர் மணி விடுப்பில் உள்ளார், அவருக்கு பதிலாக மாற்று பயிற்சி ஆசிரியர் நியமித்தும், அவர் வெளியில் சென்று விட்டார் என்று கூறினார்.

    இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். அங்குள்ள ஆதி திராவிடர் விடுதியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், ஒருவருக்கு மட்டும் தூய்மைப்பணி செய்து வருவதற்கு மட்டும் சம்பளம் கொடுக்கபட்டு வருகிறது என்பதையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் ரவி, தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×