என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியை இடம் மாற்றம் செய்ய வேண்டும்-பா.ம.க.வினர் வலியுறுத்தல்
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
- எண்ணேகொல்- படேதலாவ் ஏரி கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பா.ம.க. மத்திய மாவட்டம், மேற்கு ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய செயலாளர் புலியரசி ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அருள் முன்னிலையிலும் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். சுங்கச் சாவடியை சின்னாறு என்ற இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். எண்ணேகொல்- படேதலாவ் ஏரி கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






