என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
    X

    கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

    • தாங்கள் நிலுவையில் உள்ள கட்டிடப் பணியை விரைந்து முடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள் நிறைவேற்றித் தரப்படும்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி தவுலதாபாத் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் சார்பில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது :-

    கிருஷ்ணகிரி நகராட்சி புதுப்பேட்டை பகுதியில் சேலம் சாலையில் கடந்த 1911 ஆம் ஆண்டு முதல் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி ஜமாத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    அந்தக் கட்டிடம் சுமார் நூறு ஆண்டிற்கும் மேலான பழமையான கட்டிடமாக இருந்ததால் அதை இடித்து புதிய கட்டிடம் கட்ட ஜமாத் கமிட்டி மூலம் நன்கொடை மூலம் முயற்சி நடந்தது.

    ஆனால் சிலர் கட்டிடம் கட்ட தடையாக இருக்கிறார்கள். இதனால் கட்டிட வேலை பாதியில் நிற்கிறது. இந்தப் பள்ளியில் சுமார் 150 முஸ்லிம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் . தற்போது கட்டிட வசதி இல்லாததால் அருகில் உள்ள சப்- ஜெயில் சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காலிகமாக நான்கு அறைகள் மட்டும் ஒதுக்கப்பட்டு மிகவும் சிரமத்துடன் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்தப் பள்ளிக்கு எல்லாம் தனியாக கட்டிட வசதியோ கழிப்பறை சத்துணவு கூடம், விளையாட்டு இடம் போன்ற எந்த அடிப்படையில் வசதியும் இல்லாமல் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். புதுப்பேட்டை பகுதியுள்ள 1500 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உள்ள நிலையில் பள்ளி இடம் மற்றும் கட்டிட வசதி இல்லாததால் முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வியறிவு பெற தடையாக உள்ளது. ஆகவே தாங்கள் நிலுவையில் உள்ள கட்டிடப் பணியை விரைந்து முடித்து, நகராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிரந்தர இட வசதி மற்றும் கட்டிட வசதி செய்து தருமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மதியழகன் எம்.எல்.ஏ. பள்ளி கட்டிடப் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

    கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது முன்னாள் நகராட்சி கவுன்சிலரும் தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான அஸ்லம், கவுன்சிலர் பிர்தோஷ்கான், முன்னாள் கவுன்சிலர் கராமத், சித்திக் முனீர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×