என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்லக்குமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்தபடம்.
பா.ஜ.க. கருத்துக்கு கிருஷ்ணகிரி எம்.பி. பதிலடி
- திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், தெரிவித்திருந்தார்.
- மத்திய அரசு ஒதுக்கீடு செய்துவிட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஓசூர்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன், "கிருஷ்ணகிரி-ஓசூர் வழியாக சென்னை -பெங்களூர் ெரயில் பாதை புதிய ெரயில் பாதை திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளிக்க விரைவில் மத்திய அமைச்சர் ஓசூர் வர உள்ளார் என்றும், இந்தத் திட்டத்திற்கு சுமார் 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக கிருஷ்ணகிரி எம்.பி, டாக்டர் ஏ செல்லகுமார் நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஓசூர் ஜோலார்ப்பேட்டை ெரயில்வே திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. ஓசூர் - ஜோலார்ப்பேட்டை இடையே ெரயில்பாதை அமைக்க இதுவரை 11 முறை சர்வே செய்யப்பட்டது. 10 முறை சர்வே செய்ததில் இந்த ெரயில்பாதையில் ெரயிலை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என அறிக்கை ெரயில் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
2019 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு,11-வது முறையாக எனது தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு, அறிக்கை தயாரித்து அளித்தபின், லாபத்துடன் இயங்கும் ெரயில்பாதை என ெரயில்வே வாரியம் ஒப்புக் கொண்டது.
இது குறித்து ஹோஸ்டியா, ஒசூர் தொழிற்சாலைகள் சங்கம், விவசாயிகள், கிரானைட் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுடன் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இத் திட்டத்திற்கு ரூ.1,496 கோடி செலவு ஆகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால்,இந்த திட்டத்திற்கு 1,900 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துவிட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
பேட்டியின் போது, மேற்கு காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ.மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.






