search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அனைத்து போலீஸ் நிலையங்களில்  மக்கள் குறை தீர்க்கும் முகாம்
    X

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில், பொதுமக்களிடம் போலீசார் மனுக்களை பெற்ற போது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரி அனைத்து போலீஸ் நிலையங்களில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

    • மேலும் பிரச்சினைக்குரிய, 19 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
    • தீர்வு ஏற்படாத வகையில், 4 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கலந்து கொண்டு மனுக்களை வாங்கினார்.

    அதேபோல கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், மற்ற போலீஸ் நிலையங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் நீண்ட நாட்களாக தீர்வு ஏற்படாத நிலப்பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல், மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகள் குறித்து மனு அளித்தனர்.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டதில் தகுதியான, 94 மனுக்கள் ஏற்கப்பட்டு, 71 வழக்குகளுக்கு தீர்வுக்கான வழிவகைகள் செய்யப்பட்டன. மேலும் பிரச்சினைக்குரிய, 19 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. தீர்வு ஏற்படாத வகையில், 4 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் அவ்வப்போது இது போன்ற குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும். இதில், நீண்டகால பிரச்னைகள், நிலப்பிரச்சனைகளில், போதிய ஆவணங்கள் இருந்தும் நடவடிக்கை தாமதமாகும் மனுதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    அவர்களின் புகார்களில் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×