என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா
- முத்தமிழ் விழா, நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா என ஐம்பெரும் விழா 2 நாட்கள் நடைபெ றகிறது
- இவ்விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முத்தமிழ் விழா, நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா என ஐம்பெரும் விழா 2 நாட்கள் நடைபெ றகிறது.
இந்த விழாவின் முதல் நாளான நேற்று காலை முத்தமிழ் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் (பொறுப்பு) கல்பனா வரவேற்றார்.
கல்லூரி யின் முன்னாள் தமிழத்துறைத் தலைவர் பேராசிரியர் ராசம்மாள், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கீதா, அரூர் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சிவகாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கிடையே நடைபெற்ற 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து கணினி அறிவியல் துறைத் தலைவர் லாவண்யா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் ஜெயபாரதி, சிறப்பு கவிதைகளை வாசித்தார். இவ்விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் 3-ம் ஆண்டு மாணவி வெண்ணிலா நன்றி கூறினார். இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பிற்பகல் நடந்த நுண்கலை மன்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் வள்ளிசித்ரா வரவேற்றார். இதில் வணிகவியல் துறை மற்றும் கூட்டுருச் செயலாண்மை துறைத் தலைவர் (பொறுப்பு) முரளி வாழ்த்தி பேசினார்.
முடிவில் நுண்கலை மன்றச் செயலர் பவித்ரா நன்றி கூறினார். விழாவையொட்டி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது.






