என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 5-ம் கட்ட பொதுக் கலந்தாய்வு
    X

    கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 5-ம் கட்ட பொதுக் கலந்தாய்வு

    • ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் வருகிற 7-ந் தேதி மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.
    • 7-ந் தேதி அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

    கிருஷ்ணகிரி, ஜூலை.2-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான ஐந்தாம் கட்ட பொதுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் வருகிற 7-ந் தேதி மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கல்லூரி அலுவலகத்தில் அன்றே ஏற்றுக்கொள்ளப்படும்.மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பெறுவதற்கு ரூ.50, எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கு ரூ.2 (சாதி சான்றிதழ் நகல்) செலுத்த வேண்டும்.

    வருகிற 4-ந் தேதி பிற்படுத்தப்பட்டோர் இன மாணவர்களக்கும், 5-ந் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மாணவர்களுக்கும், 6-ந் தேதி ஆதிதிராவிடர் மாணவர்களுக்கும், 7-ந் தேதி அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த கலந்தாய்வின் போது, இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல், இ.எம்.ஐ.எஸ் எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (10, 11, 12-ம் வகுப்பு), புகைப்படங்கள் 4, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தக முதல்பக்க நகல், சேர்க்கைக் கட்டணமாக கலைப்பிரிவுக்க ரூ.2,100, அறிவியல் பிரிவிற்கு ரூ.2,120, கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1,220 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு காலியிடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×