search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  1,300 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,300 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

    • ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
    • இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்

    1300 மையங்களில் தடுப்பூசி முகாம் நடை பெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், இரண்டா வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடை யும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×