என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கஞ்சா விற்ற 5 பேர் சிக்கினர்
  X

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் சிக்கினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கஞ்சா விற்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
  • சுமார் 1,500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக கஞ்சா விற்பனை குறித்து சோதனை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் கிருஷ்ணசாமி தெரு பகுதியை சேர்ந்த சுதர்சன் (வயது 22) என்பவர் பாப்பாரப்பட்டி பகுதியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ரோந்து சென்றபோது கஞ்சா விற்று சிக்கினார்.

  கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் பெருமாள் நகர் பகுதியில் ஏசாஸ் (36) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். தலைப்பள்ளி பகுதியில் ஸ்ரீதர்(23) என்பவர் கஞ்சா விற்று பிடிபட்டார்.

  காவேரிப்பட்டினம் போலீஸ் சரகம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் சரத்குமார் (24) என்பவர் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார். இதேபோல பர்கூர் போலீஸ் சரகம் கொடியூரில் நாகராஜ்(62) என்பவர் கஞ்சா விற்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  இவர்களிடமிருந்து சுமார் 1,500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×