search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் மாநில அளவிலான சப்ஜூனியர் எறிபந்து போட்டிகளில், கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் சாதனை
    X

    ஓசூரில் மாநில அளவிலான சப்ஜூனியர் எறிபந்து போட்டிகளில், கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் சாதனை

    • ஒசூரில் மாநில அளவிலான சப்ஜூனியர் எறி பந்து போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் சாதனை படைத்தனர்.
    • தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்கத்தின் சார்பில், மாநில அளவி லான சப்-ஜூனியர் எறிபந்து போட்டிகள், ஓசூர் தின்னூரில் உள்ள தனியார் பள்ளியில், 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த போட்டிகளை, முதன்மை விருத்தினராக கலந்து கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார்.

    இந்திய எறிபந்து சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட எறிபந்து சங்க தலைவர் செந்தமிழ்செல்வன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தவமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்க புரவலரும், ஓசூர் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ். நாராயணன், தனியார் பள்ளி தாளாளர் ஆர்.தீபா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில், தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகள், பகல், இரவாக 122 ஆட்டங்கள் நடைபெற்றது.

    நேற்று போட்டிகள் நிறைவடைந்து, அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. போட்டிகளில் மாணவர் மற்றும் மாணவியர் அணியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியே முதலிடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றன.மேலும் வீரர், வீராங்கனை யருக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.

    அதேபோல், சென்னை மாவட்ட அணி மாணவ, மாணவியர் அணி 2-வது இடத்தையும் , 3-வது இடத்தை ஈரோடு மாவட்ட மாணவ, மாணவியர் அணியும் பிடித்தன. மேலும் இதில், பள்ளி முதல்வர் பவானி சங்கரி, ஆசிரிய, ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×