என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக மாணவர்கள் தின விழா
- உலக மாணவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
- மாணவ ,மாணவியருக்கு இயக்குநர் டாக்டர். சந்தோஷ் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு உலக மாணவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி வரவேற்புரையாற்றினார். பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கி பேசுகையில் மாணவர்கள் அப்துல் கலாம் கண்ட கனவினை நிறைவேற்றி நமது நாடு வல்லரசாக மாற்ற மாணவர்கள் உறுதி எடுக்கவேண்டும் மற்றும் அவர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர் வீட்டிற்கு ஒரு மரம் நடவு செய்து இயற்கையை பேணிக்காக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான போட்டிகள், கட்டுரை, பேச்சுப்போட்டி, ஓவிய ப்போட்டி நடைப்பெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ ,மாணவியருக்கு இயக்குநர் டாக்டர். சந்தோஷ் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர் பாஷா மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.






