search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியை ஆண்ட கொடை வள்ளல்  மன்னர் அதியமானுக்கு   அரசு விழா எடுக்க வேண்டும்   -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    தருமபுரியை ஆண்ட கொடை வள்ளல் மன்னர் அதியமானுக்கு அரசு விழா எடுக்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • தமிழக அரசு அதியமான் கோட்டம் அமைத்து பராமரித்து வருகிறது.
    • அரசு விழா எடுக்க வேண்டும் என பொதுமக்கள் . சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் சங்ககால தமிழ் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி பெருமையை அடுத்த தலைமுறைக்கு சேர்க்கும் வகையில் தமிழக அரசு அதியமான் கோட்டம் அமைத்து பராமரித்து வருகிறது.இதை தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் பார்த்து சென்று வருகின்றனர்.

    மேலும் தமிழ் சமூகத்தின் பெருமையை காலத்திற்கு சொல்லும் வகையில் ,தமிழக அரசு அரசு விழாவாக எடுத்து நடத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

    பன்னிரண்டாம் நூற்றாண்டு பிற்பகுதியிலும், 13-ம் நூற்றாண்டு தொடக்கப்பகுதியிலும் தருமபுரி தகடூர் நாட்டை ஆட்சி செய்தவர் அதியமான் நெடுமான் அஞ்சி.இவர் இப்பகுதியை ஆண்ட ராசராச அதிகமானின் மகன்.

    தமிழ் மன்னர்களான சேரர் ,சோழர், பாண்டியர் போன்ற மன்னர்களுக்கு இணையாக தமிழ் சமூகம் பெருமைப்படும் வகையில் உலகிற்கு பறைசாற்றியவர் மன்னன் அதியமான்.

    அதியமான் நெடுமான் அஞ்சி வீரம் மிக்கவராகவும், சேர, சோழ, பாண்டியர், கடையேழு வள்ளல்களான பாரி, பேகன், ஆய், காரி, ஓரி, நல்லி என பல்வேறு மன்னர்களுடன் போரிட்டுள்ளார்

    போர்க்களத்தில் சேரன், சோழன், பாண்டியன், திதியன்,எருமை யூரன், இளங்கோ வேண்மான், பொரு நன் என்ற 7 அரசர்களையும் போரில் வென்றது தமிழினத்தின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இருந்துள்ளது.

    சங்க பாடல்களில் தமிழ் அவ்வை பாட்டி மொத்தம் 59 பாடல்கள் பாடியுள்ளார், அதில் அதியமான் குறித்து பாடிய பாடல்களே அதிகமாக உள்ளது. நீண்ட நாள் உயிர் காக்கும் தன்மை கொண்ட அரிய வகை நெல்லிக்கனியை தான் உண்ணாமல் அவ்வைக்கு வழங்கியதாக அவ்வையாரே பதிவு செய்துள்ளார்.

    தகடூர் கல்வெட்டு என்னும் நூல் அதியமான் மன்னர்களின் பெருமையை விவரிக்கிறது.

    சங்க கால இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து , சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதியமான் அஞ்சியின் முன்னோர்கள் முதல் முதலாக கரும்பு பயிரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து பயிரிட்டனர் என என குறிப்புக்கள் உள்ளன.

    எனவே தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் மன்னர் அதியமான் குறித்து அடுத்த தலைமுறைக்கு தகவல் சேர்க்கும் வகையிலும் நட்பு. வீரம், தமிழ் பற்று போன்றவற்றில் சிறந்து விளங்கிய தருமபுரி மண்ணுக்கு பெறுமை சேர்க்கும் மன்னர் கொடை வள்ளல் அதியமானுக்கு அரசு விழா எடுக்க வேண்டும் என பொதுமக்கள் . சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×