search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் கேரள வியாபாரிகள் வராததால் களை இழந்தது
    X

    ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் இன்று மாடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்.


    ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் கேரள வியாபாரிகள் வராததால் களை இழந்தது

    • ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது
    • சந்தையில் கேரள வியாபாரிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றுவரும் கால்நடை சந்தையானது தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையாகும்.

    வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர் ,நத்தம், பழனி மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், தேனி, பொள்ளாச்சி, காங்கேயம், மதுரை, உசிலம்பட்டி, ஈரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஒட்டன்சத்திரம் கால்நடைச் சந்தைக்கு வருவார்கள்.

    சந்தைக்கு இதர நாட்களில் 800 முதல் ஆயிரம் வரையிலான மாடுகளும் விசேஷ நாட்களில் 1,500 முதல் 2,000 மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    தற்போது கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கேரள வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் மாடுகளை வாங்க முன்வராததால் சந்தைக்கு விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட மாடுகள் விற்பனை இன்றி மீண்டும் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை இன்று களையிழந்து காணப்பட்டது.

    எதிர்பார்த்த விற்பனை நடைபெறாததால் விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


    Next Story
    ×