என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிபட்டினத்தில்   ஸ்ரீ மாரியம்மன் சாமுண்டி அம்மன் ஊர் திருவிழா
    X

    பொங்கல் வைத்து வழிப்பட்ட பெண்களை படத்தில் காணலாம்.

    காவேரிபட்டினத்தில் ஸ்ரீ மாரியம்மன் சாமுண்டி அம்மன் ஊர் திருவிழா

    • பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    • நேர்த்திக்கடனான ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலி கொடுத்தும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சாமுண்டியம்மன் ஊர் பண்டிகை அனைத்து சமுதாய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக ஊர் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவில் அனைத்து சமுதாய பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் பொங்கல் வைக்க இடம் ஒதுக்கி உள்ள இடத்தில் தங்கள் நேர்த்திக்கடனான ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலி கொடுத்தும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ சாமுண்டி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு பட்டிமன்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    ஊர் பொதுமக்களாலும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×