என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூமாலை வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்?
    X

    பூமாலை வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்?

    • சட்டப்பேரவையில் குளித்தலை எம்.எல்.ஏ. ரா மாணிக்கம் கேள்வி
    • சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தில் கேள்வி

    குளித்தலை ,

    தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் பேசும் போது.இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையிலே நான் துணை கேள்வி கேட்பதற்கு அரிய வாய்ப்பினை வழங்கிய பேரவை தலைவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த 4-ந் தேதி , அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 266 கோடி நலத்திட்டங்கள் மற்றும் 1494 சுய உதவிக்குழுக்களுக்கு 40 கோடி ரூபாய் வங்கி கடன்கள் வழங்கினார்கள்.அன்றை தினம் வருகை தந்த போது, கரூர் தாந்தோனி பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகம் மரமாத்து பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதனை விரைவில் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார், அந்த பணி முடிவு தருவாயில் உள்ளது எப்போது அந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று பேசினார்.இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்கையில் முதல்வர் அவர்களுடைய திருக்கரங்களால் வருகின்ற மே மாதம் இறுதிக்குள் திறந்து வைக்கப்பட்டு, சுயஉதவிக்குழுக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×