என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது
  X

  மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
  • 10 மாதங்களுக்கு பிறகு ஓய்வுபெற உள்ளார்

  கரூர்

  கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதை (வயது 59). இவர் தோகைமலை அருகே உள்ள பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்த தகவலின் பேரில், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, அறிவியல் ஆசிரியர் மருதை மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில் ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் ஆசிரியர் மருதை இன்னும் 10 மாதங்களுக்கு பிறகு ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×