என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணறு தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை
    X

    கிணறு தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை

    • கிணறு தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
    • கிணறு நீரை எடுத்து செல்லும் லாரி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் எச்சரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டத்தில் உள்ள கிணற்றுகளில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்யக் கூடாது, அவ்வாறு விற்பனை செய்யும் கிணறு உரிமையாளர்கள் மீதும் தண்ணீரை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட வருவாய்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் கிணற்றிலிருந்து தொடர்ந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதால் விவசாயக் கிணறுகளில் உள்ள தண்ணீர் மிகவும் குறைந்து விவசாயம் பாதிக்கும்.அதே போல் குடிநீர் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரும் கீழ் மட்டத்திற்கு சென்று குடிநீர் விநியோகம் செய்வதும் பாதிக்கப்படும். எனவே அரசு அனுமதியின்றி தண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீதும், தண்ணீரை வாங்கி செல்பவர்கள் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப் போவதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×