search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குவாரியை மூடவைத்த சமூக ஆர்வலர்கொலையில் திடுக்கிடும் தகவல்-அப்துல் சமது எம்.எல்.ஏ. பேட்டி
    X

    குவாரியை மூடவைத்த சமூக ஆர்வலர்கொலையில் திடுக்கிடும் தகவல்-அப்துல் சமது எம்.எல்.ஏ. பேட்டி

    • கரூர் க.பரமத்தி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகநாதன்.
    • ஜெகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முதல் முயற்சி அல்ல, 3-வது முயற்சியில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கரூர்

    கரூர் க.பரமத்தி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகநாதன். அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை மூட நடவடிக்கை எடுத்தார். இதனால் ஏற்பட்ட விரோதத்தில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். க.பரமத்தி போலீசார் கொலை வழக்குப்பதிந்து குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் கொலை குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்ய, உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் கள ஆய்வு நடத்திட இந்திய ெபாதுவுடமை கட்சியைச் சேர்ந்த வக்கீல் மோகன், மணப்பாைற எம்.எல்.ஏ. அப்துல்சமது உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அப்துல்சமது எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா காளிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், தி.மு.க. கிளை செயலாளருமான ஜெகநாதன், அதிமுகவைச் சேர்ந்த செல்வகுமார் என்ற குவாரி உரிமையாளரால் வேன் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதில் சம்பந்தப்பட்ட இடங்களை குழு ஆய்வு செய்தது. ஜெகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முதல் முயற்சி அல்ல, 3-வது முயற்சியில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது 2019-ல் ஜெகநாதன் மீது குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிளகாய் பொடியை ஜெகநாதன் மீது தூவி தாக்குதல் நடத்தியுள்ளனர். அது பற்றியும் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இரண்டாவது தாக்குதலில் செல்வகுமார் மற்றும் அவரது ஆட்களால் ஜெகநாதனின் கை, கால்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட செல்வகுமார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு பின்னர் சாதாரண அடிதடி வழக்காக மாற்றப்பட்டது.

    அதனை எதிர்த்து ஜெகநாதன் தொடர்ந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் ஜெகநாதன் ெகாலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற கொலைச் சம்பவங்கள் தொடரக்கூடாது. இது குறித்த ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம்.

    புகளூர் தாலுகாவில் பல குவாரிகள் அனுமதியின்றி விதிகளை மீறி இயங்குவதாக தெரிய வருகிறது. அங்கு வைக்கப்படும் சக்தி வாய்ந்த ெவடி பொருட்களால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

    Next Story
    ×