என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    முறையான திறன் பயிற்சியால் ஜவுளி வர்த்தகத்தை ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்த்தலாம்- கலெக்டர் பேச்சு
    X

    முறையான திறன் பயிற்சியால் ஜவுளி வர்த்தகத்தை ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்த்தலாம்- கலெக்டர் பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முறையான திறன் பயிற்சியால் ஜவுளி வர்த்தகத்தை ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்த்தலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    • 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளன.

    கரூர்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை அரசு தொழிற் பயிற்சி மையத்தில் இளைஞர் திறன் திருவிழா முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் மாவட் டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நட த்தப்படுகிறது.

    இளைஞர்கள் தங்களுக்குரிய திறன்களை மேம்படுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். எங்கோ செய்யும் பொருட்கள் நாடு முழுவதும் விரிவடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களும் பல்வேறு மாநிலத்திற்கு, வெளிநாட்டிற்கு சென்று விற்பனை செய்து கொண்டு வருகின்றது.

    வேலை வாய்ப்பு பெறுவது என்றால் சில தனிப்பட்ட திறன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் திறன் வளர்ப்பு என்பது அதற்கான உங்கள் அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்ற திறன் வளர்ப்பு பயிற்சி எங்கேயும் வழங்க மாட்டார்கள். உங்க ைளத் தேடி வந்து பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் பாலம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் ரூ.8,000 முதல் ரூ.40,000 சம்பளம் உள்ள 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கு தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். 3 மாத திறன் பயிற்சி முடித்து விட்டால் தங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் வேலைக்கு தகுந்தது போல் திறன்களையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    கரூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஜவுளி ஏற்றுமதி செய்வதை திறன் பயிற்சி மூலம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடியாக உர்த்த வேண்டும் என்றார்.

    முகாமில் 400க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பங்ேகற்றனர். பின்னர் தொழில்திறன் பயிற்சி நிறுவனத்தின்மூலம் பயிற்சிக்குதேர்வு செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கை சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    Next Story
    ×