என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நலப்பணியாளர்களுக்கு புதிய பணிகள் - கலெக்டர் தகவல்
    X

    மக்கள் நலப்பணியாளர்களுக்கு புதிய பணிகள் - கலெக்டர் தகவல்

    • பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பணியாளர்களுக்கு பணி வாய்புகள் வழங்கப்பட உள்ளன.
    • 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றி கடந்த 2011ம் ஆண்டு நவ.8ல் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட தற்போதைய அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.5,000-, கூடு தலாக ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2,500 என மொத்தம் ரூ.7,500- மாதம் ஒன்றுக்கு ஒட்டு மொத்த தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    எனவே, கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 8ல் பணியிழந்த இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஏற்கனவே பணியாற்றியதற்கான விபரத்துடன் பணியில் ஈடுபட உள்ளதற்கான விருப்பக் கடிதத்தினையும் வ ட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) நாளை மறுநாள் (ஜூன் 13ம் தேதி) முதல் வரும் 18ம் தேதி வரை வழங்கலாம்.

    அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்பக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு வரும் ஜூலை 1ம் தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். எனவே பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப் பணியாளர்கள் இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள

    மேற்குறிப்பிட்ட நாட்களில் தவறாமல் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறும் அத்ததைய விருப்ப விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட பரிசீலிக்கப்பட உள்ளதால் குறிப்பிட்ட காலத்திற்குள் விருப்பம் தெரிவிக்கவும், காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×