என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளித்தலை தி.மு.க. ஆலோசனை கூட்டம்
- குளித்தலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- வாக்கு சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்பு
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை கிழக்கு, மேற்கு, கிருஷ்ணராயபுரம் கிழக்கு, தெற்கு ஒன்றியங்கள் மற்றும் நங்கவரம், மருதூர் பேரூர் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது, ஆலோசனை கூட்டத்தில் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் பேசுகையில்,
வருகின்ற 24 -ந் தேதி திருப்பூர் மாவட்டம் படியூரில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தி.மு.க பெற வேண்டும் என்று அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்வது குறித்து பேசினார். ஆலோசனை கூட்டத்தில் கட்சி தேர்தல் தொகுதி மேற்பார்வையாளர் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொய்யாமணி தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், மற்றும் பேரூர் செயலாளர்கள் ரவீந்திரன், முத்து(எ)சுப்பிரமணி, மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.






