search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
    X

    கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

    • உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பண்ணையைத் திறந்து வைத்து மூலிகைச்செடியை நட்டு வைத்தார்
    • அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களுக்கு இடம் பெற்று சொந்த கட்டிடங்கள் கட்டுதல் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கரூர் மாவட்ட நிர்வாக பொறுப்பு (போர்ட்போலியோ) நீதிபதியுமான மஞ்சுளா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், சார்பு நீதிபதி பாக்கியம் உள்ளிட்ட நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து விரைவு, மகளிர் நீதிமன்றங்களை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பண்ணையைத் திறந்து வைத்து மூலிகைச்செடியை நட்டு வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சாட்சிகள் விசாரணை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து அறிவுறுத்தினார்.

    முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், புதிதாக தொடங்கப்பட்டு வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களுக்கு இடம் பெற்று சொந்த கட்டிடங்கள் கட்டுதல் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×