என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
- சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நடந்தது
கரூர்:
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் சமைத்து வழங்கும் பணியை வழங்க வலியுறுத்தி, கரூர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கரூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அந்தந்த ஒன்றியத்தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாந்தோணி ரமணி, கரூர் ருக்மணி, க.பரமத்தி பூமாதேவி, அரவக்குறிச்சி தனலட்சுமி, குளித்தலை கோகிலா, கிருஷ்ணராயபுரம் வசந்தி, தரகம்பட்டியில் துணைத்தலைவர் சின்னசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவற்றில் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story