என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பூக்கள் விலை சரிவு
  X

  பூக்கள் விலை சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
  • திருவிழாக்கள் முடிவடைந்ததால் இந்த சரிவு

  கரூர்:

  கரூர் மாவட்டத்தில் வாங்கல், மாயனூர், லாலாப்பேட்டை உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பூக்களை கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

  மல்லிகைப்பூ ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லை 200 முதல் 250 ரூபாய், அரலி 150 ரூபாய், ரோஜா 100 ரூபாய், கனகாம்பரம் 150 ரூபாய், ஜாதிமல்லி 200 ரூபாய், தாமரைப்பூ 10 ரூபாய்க்கு ஏலம் போயின.

  திருமணம், கோவில் திருவிழாக்கள் முடிவடைந்ததால் பூக்கள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  Next Story
  ×