என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்றது
கரூர்:
கமலேஷ் சந்திரா கமிட்டியினர் பரிந்துரைத்த 3 கட்ட சர்வீஸ் அடிப்படையில் வழங்க வேண்டிய வெயிட்டேஜ் பரிந்துரையை இலாகாவும், மத்திய அரசும் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த தாமதத்தை கண்டித்து கரூர் கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கரூர் கோட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
சங்க மாநில செயலாளர் பாஸ்கரன், மூத்த ஆலோசகர் ஆர்.ஜான்பிரிட்டோ, கோவை முத்துசாமி கண்டன உரையாற்றினர். கரூர் கோட்ட பொருளாளர் ஆர்.சிங்கராசு, செயலாளர் சி.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






