என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிமை பொருள் குற்றபுலனாய்வு ஆய்வு கூட்டம்
கரூர்,
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கான ஆய்வு கூட்டம் கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் திருச்சி மண்டல காவல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் ஏ.டி.ஜி.பி. அருண் தலை மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ரேஷன் பொருட்கள்கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை தொடர்பான குற்றங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கான ஆலோசனை களையும் , குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாேலாசிக்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் , திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறையின் எஸ்.பி. சுஜாதா, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய சரகங்களின் உட்கோட்ட காவல்துறை டி.எஸ்.பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






