என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
    X

    மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

    • மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
    • வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடைவீதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் மனைவி செல்லம்மாள் (வயது75). இவர் நேற்று அதிகாலை வீட்டு முன் வாசல் தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நடந்து சென்ற அடையாளம் தெரியாத மர்மநபர், செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து மாயனூர் போலீசில் செல்லம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமரா பதிவுகளில் சங்கிலியைப் பறித்து சென்ற நபரின் உருவம் பதிவாகி உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×