என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் 3.50 லட்சம் தேசியக்கொடி ஏற்றி வைப்பு - கலெக்டர் தகவல்
- கரூரில் 3.50 லட்சம் தேசியக்கொடியை ஏற்றி பறக்கவிட்டுள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
- குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார்.
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அவரது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
நாடு சுதந்திமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி நாட்டின் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், வீடுகள் என சுமார் 3.50 லட்சம் தேசியக்கொடியை ஏற்றி பறக்கவிட்டுள்ளனர் என்றார்.
Next Story






