என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2.85 கோடியில் 120.47 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி
    X

    ரூ.2.85 கோடியில் 120.47 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.2.85 கோடியில் 120.47 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.
    • பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் ரூ.2.85 கோடியில் 120.47 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுவதாக கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

    கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் செயல்படுத்தி வரும் சிறப்பு தூர்வாரும் திட் டப் பணிகள் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு கைத்தறி துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அ லுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் க்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஸ் பேசியதாவது, கரூர் மாவட்டத்தில் ரூ.2.85 கோடியில் சுமார் 120.47 கி.மீட்டர் தூரத்திற்கு 15 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாரப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீரானது வீணாகாமல் வழங்கு வாய்க்கால்களை முறையாக தூர்வாரி, ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    தூர்வாரும் பணியை ஏனோ தானோ என்று செயல்படாமல் அறிவியல் நுட்பத்துடன் செயல்பட்டு கிடைக்கக்கூடிய மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும். இவ்வாறு தூர்வாரப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்வதற்கு உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் ஒரு போகம் செய்யும் விவசாயி இரண்டு போகம் விவசாயம் செய்வதற்கு இப்பணியானது ஊன்று கோலாக இருக்க வேண்டும் என்றார்.


    Next Story
    ×