search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம்  கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீப வழிபாடு
    X

    கார்த்திகை தீப வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள்.

    பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீப வழிபாடு

    • 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
    • பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் அர்ச்சகர் கீர்த்தி வாசகன் ஏற்றி வைத்தார்.

    அதன் பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. டி.எஸ்.பி. கீதா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதில் கோவில் செயல்அலுவலர் ஹரிஷ்குமார், அ.தி.மு.க. மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×