search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தொடக்கப் பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்கம்
    X

    கொன்றைக்காடு தொடக்கப்பள்ளியில் சிலம்பம் பயிற்சி வகுப்புகள் நடந்தது.

    அரசு தொடக்கப் பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்கம்

    • கொன்றைக்காடு தொடக்கப்பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
    • பயிற்சியாளர் ரென்சி பாண்டியன் தற்காப்பு கலையின் அவசியத்தை மாணவர்களுக்கு கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

    விழாவிற்கு தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பயிற்சியாளர் ரென்சி பாண்டியன் தற்காப்பு கலையின் அவசியம் மற்றும் பயிற்சி முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    வாரம் 2முறை நடக்கும் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சிகளில் மாணவ, மாணவிகள் 84 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×