என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஏரி நிரம்பியது:  உபரிநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதி
    X

     காரப்பட்டு பகுதியில் வீடுகளிலும், தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதையும்,அதில் நடந்து செல்லும் பொதுமக்களையும் காணலாம்.

    ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஏரி நிரம்பியது: உபரிநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதி

    • ஏரி நீரோடு கழிவுநீரும் சேர்ந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.
    • குழந்தைகளுக்கு மலேரியா, டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சியில் மெயின் ரோட்டை ஒட்டிய வாறு ஆலேரி ஏரி உள்ளது. மிகுந்த பரப்பளவை கொண்ட இந்த ஏரி பகுதியை ஒட்டியவாறு செல்லும் சாலை வழியே மகுண்டமலை , நல்லாகவுண்டனூர் , பெரியார் நகர், போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தினமும் பயணிக்கிறார்கள்.

    இந்தப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் ஏரிக்கு அதிக நீர்வரத்தின் காரணமாக தண்ணீர் நிரம்பி வழிந்து சாலைகளில் வழியாகவும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் புகுந்து தேங்கியுள்ளது. ஏரி நீரோடு கழிவுநீரும் சேர்ந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது..

    இதனால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருவதால் கடந்த ஒரு வார காலமாக இங்குள்ள குழந்தைகளுக்கு மலேரியா, டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.

    இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக இந்த கழிவு நீரை வெளியேற்ற போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×