என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரக்காணம் அருகே  காராமணி பயிர் தீ வைத்து எரிப்பு:ரூ. 2 லட்சம் சேதம்
  X

  தீவைத்து எரிக்கப்பட்ட காராமணி பயிரை படத்தில் காணலாம்

  மரக்காணம் அருகே காராமணி பயிர் தீ வைத்து எரிப்பு:ரூ. 2 லட்சம் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • . சதீஷ் என்பவர், இதே பகுதியில் 3ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் காராமணி பயிர் சாகுபடி செய்து இருந்தார்.மறுநாள் காலையில் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த காராமணி பயிர்கள் தீயில் கருகி இருந்தது.
  • யாரோ மர்ம நபர்கள் காராமணி பயிருக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அ ட ச ல் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் சதீஷ்இவர் இதே பகுதியில் 3ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் காராமணி பயிர் சாகுபடி செய்து இருந்தார். இந்த காரமணி பயிரை அறுவடை செய்து அதை எந்திரம் மூலம் அடிப்பதற்காக டிராக்டரை கொண்டு வந்து அடித்துக் கொண்டிருக்கும் போது சிறிது நேரம் ஓடிய பின் டிராக்டர் பழுதானது .மறுநாள் காலையில் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த காராமணி பயிர்கள் தீயில் கருகி இருந்தது.

  யாரோ மர்ம நபர்கள் காராமணி பயிருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதனால் சதீஷ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தீ வைத்து எரிக்கப்பட்ட காராமணி பயிரின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும் .இது குறித்து சதிஷ் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் அன்பரசு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×