என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொட்டாரத்தில் அண்ணா படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை
  X

  கொட்டாரத்தில் அண்ணா படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
  • அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

  கன்னியாகுமரி:

  கொட்டாரம் பேரூர் தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் அண்ணாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

  கொட்டாரம் பேரூர் தி.மு க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் ராஜகோபால், கொட்டாரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் சுப்பையாபிள்ளை, ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகர், கிளை செயலாளர்கள் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×