என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- 25 வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பிஜூ மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 44). இவர் சூழால் பகுதியில் வசித்து வந்தார். ஊரம்பு பகுதியில் இயங்கி வரும் கம்பி கடை ஒன்றில் லோட் மேனாக வேலை செய்து வந்தார். கடந்த 25 வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பிஜூ மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் பிஜு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மனைவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது கணவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இவர் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.மேலும் அக்கம்பக்கத்தினர் இது குறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






