search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது
    X

    புதுக்கடை அருகே வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது

    • சி.சி.டி.வி காமிரா காட்டிக் கொடுத்தது
    • முதற்கட்ட விசாரணையில் 7 பவுன் நகைகள் திருடியதாக தெரிய வந்துள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மூன்று முக்கு பகுதி பனவிளையை சேர்ந்தவர் ஜெபநிசாந்த். இவர் தூத்துக்குடியில் ஒரு மீன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    ஜெபநிசாந்த், சமீபத்தில் புதிதாக வீடு கட்டி மனைவி ரினி வளர் மற்றும் குழந்தையுடன் குடி புகுந்தார். இந்த நிலையில் புதிய வீட்டில் தரை பாலீஷ் போடும் பணி நடந்துள்ளது. இந்த பணியில் மார்த்தாண்டம் சிராயன்குழி பகுதியை சேர்ந்த ஏசாயா (54) ஈடுபட்டு உள்ளார்.

    அப்போது அவர், வீட்டு சாவியில் ஒன்றை திருடி உள்ளார். பின்னர் அதனை வைத்து, ரினிவளர் குழந்தையை பள்ளிக்கு கொண்டு விட செல்லும் நேரங்களில் வீட்டை திறந்து பல முறை நகைகளை திருடியுள்ளார்.இதுபற்றி யாருக்கும் தெரியவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெப நிசாந்த் பீரோவில் நகை, பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சி.சி.டி.வி. கேமிராவையும் ஆய்வு செய்தார். அப்போது திருட்டு நடந்ததை உறுதி செய்துள்ளார்.

    தொடர்ந்து ரகசியமாக வீட்டு கேமரா பதிவை தனது செல்போனில் இணைப்பு செய்து வைத்துள்ளார். நேற்று மாலை வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், ஏசாயா மீண்டும் சாவி போட்டு திறந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இது ஜெப நிசாந்த் செல்லுக்கு அலர்ட் மெசெஜ் மூலம் தெரிய வந்தது.

    உடனே அவர் அங்கிருந்து தகவல் தெரிவித்ததன்பேரில் அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து ஏசாயாவை பிடித்தனர். இதையடுத்து புதுக்கடை போலீசில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது, நகைகள், பணத்தை பல முறை திருடியதை ஏசாயா ஒப்புக் கொண்டார். முதற்கட்ட விசாரணையில் 7 பவுன் நகைகள் திருடியதாக தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏசாயாவை கைது செய்தனர்.

    Next Story
    ×