search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே தனியார் பள்ளியில் பணிபுரிந்த கன்னியாஸ்திரி தற்கொலை செய்தது ஏன்? - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
    X

    இரணியல் அருகே தனியார் பள்ளியில் பணிபுரிந்த கன்னியாஸ்திரி தற்கொலை செய்தது ஏன்? - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

    • மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
    • அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை எனவும் தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் தேவதாஸ்.

    இவரது மகள் அன்பு விஜய் ஞானஜோதி (வயது 27). கன்னியாஸ்திரியான இவர் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    இதற்காக அப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். அவருடன் மேலும் சில பெண்கள் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி நேற்று வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கன்னியா ஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதியின் சகோதரி ஜோதி இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    இதில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை எனவும் தெரியவந்தது.

    இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிகிறது. என்றாலும் போலீசார் கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×