search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டத்தில் கடலில் மாயமான மீனவரின் கதி என்ன? - 2-வது நாளாக தேடும்பணி தீவிரம்
    X

    முட்டத்தில் கடலில் மாயமான மீனவரின் கதி என்ன? - 2-வது நாளாக தேடும்பணி தீவிரம்

    • ஆளில்லாமல் ஒரு வள்ளம் கடலில் தனியாக மிதப்பதை பார்த்தனர்.
    • விசைப்படகுகளில் சென்று மரியதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி :

    குமரி மேற்கு கடற்கரை யோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனால் விசைப் படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. நேற்று காலை அழிக்கால் மீனவர்கள் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற போது, ஆளில்லாமல் ஒரு வள்ளம் கடலில் தனியாக மிதப்பதை பார்த்தனர். அதனை மீட்டு முட்டம் மீன் பிடித்துறை முகத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    தனியாக மிதந்த வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் யார்?அவர் தவறி கடலில் விழுந்தா ரா?அவர் கதி என்ன? என்று மீனவர்கள் துப்பு துலக்கினர். இதற்கிடையே தகவலறிந்து குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்.

    விசாரணையில் தனியாக மிதந்த வள்ளம் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த மரியதாசன் (வயது 57) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மீன் பிடிக்க சென்ற அவர் கரை திரும்பவில்லை என்றும், அவர் வள்ளத்திலிருந்து தவறி விழுந்து இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள், வள்ளம், விசைப்படகுகளில் சென்று மரியதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று நாள் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இன்று காலை அவர்கள் 2-வது நாளாக மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்ட னர். வள்ளத்திலிருந்து மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாயமான மீனவர் மரியதாசனுக்கு பிரபா (48) என்ற மனைவியும், 3 மகள் களும் உள்ளனர்.

    Next Story
    ×