search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணையில் இருந்து கும்பப்பூ சாகுபடிக்காக 30-ந்தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
    X

    பேச்சிப்பாறை அணையில் இருந்து கும்பப்பூ சாகுபடிக்காக 30-ந்தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

    • தற்போது கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.
    • சானல்களில் சரியான அளவு தண்ணீர் கொடுக்கப்படாததால் விவசாயம் அழிந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந் தது.

    கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் ஸ்ரீதர் முதலா வதாக பொறுப்பேற்று முதல் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார் என்பதால் விவசாயிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரை வரவேற்றனர்.இதை தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. விவசாயி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.ஒரு சில இடங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே மார்ச் 30-ந்தேதி வரை பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்யூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை ஆய்வு செய்து விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனந்தனார் சானலில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சானல்களில் சரியான அளவு தண்ணீர் கொடுக்கப்படாததால் விவசாயம் அழிந்து வருகிறது. தெங்கம்புதூர் பகுதிகளில் விலை நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி வருகிறது.

    எனவே விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து மாணவ-மாணவிகள் வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்றால் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு ஏற்கனவே 105 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. தற்பொழுது பாலமோர் எஸ்டேட் பகுதியில் 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பகுதியில் விவசாய கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.

    கலெக்டர் ஸ்ரீதர் கூறிய தாவது:-

    சானலில் தற்பொழுது ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.அனந்தனார் சானலில் கழிவுகளை கொட்டாமல் இருக்க அறிவிப்பு பலகை கள் வைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் கல்லூரி அமைப் பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பி ரியா, கூட்டுறவு இணைப்பதி வாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

    Next Story
    ×