என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே முட்புதரில் கிடந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததா?
- சி.சி.டி.வி.காமிராவின் காட்சிகள் ஆய்வு
- குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
நாகர்கோவில், நவ.19-
புதுக்கடை அருகே முன்சிறை சந்திப்பில் இருந்து முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலகம் மங்காடு வழியாக களியக் காவிளைக்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது.
இதை பார்த்த பொது மக்கள் புதுக்கடை போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். புதுக்கடை போலீசாரும் குழந்தை நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
பின்னர் முட்புதரில் கிடந்த குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை வீசப் பட்டுள்ளது.
எனவே அதே பகுதியை சேர்ந்த பெண்கள் யாராவது வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். கள்ளக்காத லில் பிறந்த குழந்தையாக இருக்க லாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர் பாக விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
அந்த பகுதியில் யாராவது நிறை மாத கர்ப்பிணியாக இருந்து தற்பொழுது குழந்தை பெற்றுள் ளார்களா? என்பது குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் குழந்தை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சி.சி.டி.வி. காமிராக்களில் சரியான காட்சிகள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள்.






