என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே அனுமதி இன்றி பாறை உடைத்த வாகனங்கள் பறிமுதல்
    X

    மார்த்தாண்டம் அருகே அனுமதி இன்றி பாறை உடைத்த வாகனங்கள் பறிமுதல்

    • அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை அருகே நல்லூர் அயனிக்காவிளை பகுதியில் சிலர் அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பாறைகளை உடைத்த கும்பல் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×