search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரி பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடியும் - மேயர் மகேஷ் தகவல்
    X

    வடசேரி பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடியும் - மேயர் மகேஷ் தகவல்

    • பிளாட்பாரங்களின் மேல் கூரைகளின் தரை ஓடுகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கும் பணி நடக்கிறது‌
    • ஆம்னி பஸ் நிலையம் ரூ. 2 கோடி செலவிலும் சீரமைக்கப் பட்டு வருகிறது

    நாகர்கோவில், மே.3-

    நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ்நிலையங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    தற்பொழுது வடசேரி பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்களின் மேல் கூரைகளின் தரை ஓடுகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கும் பணி நடக்கிறது. பழைய தரை ஒடுகள் தற்பொழுது அகற்றப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    மழையின் காரணமாக அந்த மேல் கூரையிலிருந்து தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் பயணிகள் அதில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து மேயர் மகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மேயர் மகேஷ் வடசேரி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேல் கூரையில் இருந்து தண்ணீர் கசிவை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் ரூ. 2 கோடி செலவிலும், ஆம்னி பஸ் நிலையம் ரூ. 2 கோடி செலவிலும் சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வடசேரி பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தரைதளங்கள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து பிளாட்பாரத்தின் மேல் கூரையில் உள்ள தரைஒடுகள் அகற்றப்பட்டு புதிய ஒடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தரைஒடுகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலிருந்து நாகராஜா கோவில் செல்லும் சாலையில் மழை நீர் தேங்குவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை உடனடியாக சீரமைப்பது தொடர்பாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மண்டல தலைவர் ஜவகர்,ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×