என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தக்கலையில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு
  X

  தக்கலையில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

   கன்னியாகுமரி :

   தக்கலை அருகே மணலி பகுதியை சேர்ந்தவர் ஜகாங்கிர் அலி. இவரது மகன் பாபு உசேன் (வயது 21). சென்னையில் உள்ள ஒரு பிரபல நகை கடையில் வேலை செய்து வருகிறார்.தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து தாயாரை பார்க்க மணலிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் நன்பரை பார்த்துவிட்டு திரும்பி காட்டாத்துறை கால்நடை மருத்துவமனை அருகே வரும் போது எதிரே கனிம வளம் ஏற்றி வந்த லாரி வேகமாக பாபு உசேன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இது சம்பந்தமாக பாபு உசேனின் தாயார் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் டாரஸ் லாரி ஓட்டி வந்த பாகோடு பகுதியை சேர்ந்த சுகு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சுகுவை போலீ சார் தேடி வருகின்றனர். மேலும் பலியான பாபு உசேன் உடலை தக்கலை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்ய ஒப்ப டைக்க பட்டது.லாரியை தக்கலை டி.எஸ்.பி. அலுவ லகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

   Next Story
   ×