search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தன்னார்வலர்களுக்கு பயிற்சி
    X

    மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தன்னார்வலர்களுக்கு பயிற்சி

    • மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரியில் நடந்தது
    • இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி :

    தமிழக அரசின் சார்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட் டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில்இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    இதன் பின்னர் ஒவ்வொரு வட்டாட்சியர்கள் தலைமையிலும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல் தலைமையில் நேற்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விருப்பப்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சிக்கு இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜாண்சன் முன்னிலை வகித்தார். இந்த பணியினை செயல்படுத்துவதற்கு பொது மக்களிடையே வழங்கப்படும் விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்வது மற்றும் என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் மேலும் பொது மக்களிடையே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உட்பட அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பின்னர் குமரி மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த திட்டத்தை பற்றி பேசினார். பின்னர் தன்னார்வலர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து சந்தேகங்களையும் ஆர்வத் துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    Next Story
    ×