என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே டாரஸ் லாரி மோதி வியாபாரி பலி
- டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜஸ்டின் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே பலி
- லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள கல்லங்குழி நாராயணத்து விளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் அருள் தாஸ் (வயது 60). இவரது மனைவி புஷ்ப ராணி, இவர்களது மகன், மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.
ஜஸ்டின் அருள் தாஸ் வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் விவசாய பணியும் செய்து வந்தார். நேற்று மதியம் அவர், மாட் டிற்கு உரம் வாங்கு வதற்காக வேர் கிளம்பிக்கு புறப்பட்டார். முண்டவிளை அருகே சென்ற போது பின்னால் டாரஸ் லாரி வந்துள்ளது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது.
இதில் டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜஸ்டின் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை கண்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கொற்றிக்கோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜஸ்டின் அருள்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.






