search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
    X

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

    • மக்கள் நடமாட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடியது
    • நிபா வைரஸ் காய்ச்சல் அச்சம்

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென் கெடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமா கும். இங்கு தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சீசன் இல்லாத காலங்களிலும் வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்க ளிலும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணமாக இருக்கின்றன.

    இந்த நிலையில் தற்போது கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கிஉள்ளது. இதனால் கேரளாவில் இருந்து குமரி மாவட்ட எல்லையான களியக்கா விளை வழியாக வரும் பயணிகள் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகே குமரி மாவட்டத் துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் சுற்றுலாத்த லமான கன்னியாகுமரிக்கு கடந்த சில நாட்களாக கேரள சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு நின்று போய் விட்டது. கேரளாவின் பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள குமரி மாவட்டம் அமைந்து உள்ளதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக உள்ளன. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப் படுகிறது.

    கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேஸ்வரசுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமா லய சாமி கோவில் போன்ற பெரிய கோவில்க ளிலும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படு கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கன்னியாகுமரியில் உள்ள கடை மற்றும் ஓட்டல்களில் வியாபாரம் இன்றி வியா பாரிகள் மிகவும் கவலை அடைந்துஉள்ளனர்.

    Next Story
    ×