search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு - மேயர் மகேஷ் தகவல்
    X

    குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு - மேயர் மகேஷ் தகவல்

    • தற்போது முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம் தேவைக் கேற்ப அணைகளில் இருந்து தண்ணீர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாந கராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகர மக்களுக்கு தற்போது முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 1½ அடிக்கு கீழாக குறைந்துள்ளது. எனவே நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கவும், கடுமையான கோடை காலமான தற் போது குடிநீர் பிரச்சினையை சமாளிக்கவும் பேச்சிப்பாறை அணையில் இருந்து கால்வாய் வழியாக முக்கடல் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நான் சென்னை சென்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை மனு அளித்தேன்.

    இந்த கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் கோதை யாறு பாசன அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டனர். அந்த உத்தரவின்படி நேற்று அர சாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. அதில் நாகர்கோ வில் மாநகராட்சியில் தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறை அத்தியாவசி யத்தை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து வருகிற 25-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம் தேவைக் கேற்ப அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட உத்தரவிட்ட முதல்-அமைச் சர் மு.க. ஸ்டாலினுக்கும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் மாநகராட்சி மக்களின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×