search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதிசாரம் டோல்கேட்டில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு
    X

    திருப்பதிசாரம் டோல்கேட்டில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு

    • மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330 ஆக நிர்ணயம்
    • கட்டண உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதர சுங்கச்சாவடிகளில் செப் டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகி றது. இதில் டோல் கேட் கட்டணம் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை எண்: 944ல் (பழைய 47பி சாலை)நாகர்கோவில் காவல்கிணறு பிரிவில் திருப்பதிசாரம் அருகே அமைக்கப்பட் டுள்ள சுங்கச்சாவடியில் கட்ட ணம் உயர்த்தப்பட்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி கார், ஜீப், வேன் அல்லது இலகுரக வாகனம் ஒருவழி முறை பயணம் செய்ய ரூ.40, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய கட்டணம் ரூ.60, வாகனம் ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒரு வழிமுறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவு சீட்டு கட்ட ணம் ரூ.1375, சுங்கச்சாவடி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.20 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இலகுரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாக னம், மினி பஸ் போன்றவற் றுக்கு ஒருவழி முறை பயணம் செய்ய கட்டணம் ரூ.65, வாக னம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய கட்டணம் ரூ.100, மாதாந்திர கடவு சீட்டு கட்டணம் ரூ.2225, மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வாகன கட்டணம் ரூ.35 ஆகும்.

    பஸ் அல்லது டிரக் இரண்டு அச்சுகள் ஒருவழி முறை பயணத்திற்கு ரூ.140, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.210, மாதாந்திர கடவுசீட்டு கட்டணம் ரூ.4655, மாவட்ட எல்லைக்குள் ஒருவழிமுறை கட்டணம் ரூ.70 ஆகும்.

    3 அச்சு கொண்ட வணிக வாகனங்கள் ஒருவழிமுறை பயணம் செய்ய ரூ.150, வாகனம் அதே நாளில் திரும்ப பயண கட்டணம் ரூ.230, மாதாந்திர கடவு சீட்டு ரூ.5080, மாவட்ட எல் லைக்குள் பயண கட்டணம் ரூ.75 ஆகும். பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்தி ரங்கள், மண் ஏற்றி செல்லும் வாகனம், 4 முதல் 6 அச்சுகள் கொண்ட வாகனம் ஒரு வழி முறை பயணம் செய்ய கட்ட ணம் ரூ.220, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.330, மாதாந்திர பயண சீட்டு ரூ.7305, மாவட்ட எல்லைக்குள் பயண கட்டணம் ரூ.110.

    அதிக அளவு கொண்ட வாகனம் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண் டவை ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.265, வாகனம் அதே நாளில் திரும்ப பயண கட்டணம் ரூ.400, மாதாந்திர கடவு சீட்டு ரூ.8890, மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப் பட்ட வாகனத்திற்கு ரூ.135 ஆகும்.

    வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங் களுக்கு 2023-24ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330 ஆகும். இது ஏற்கனவே ரூ.315 ஆக இருந்தது. தற்போது ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×