என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தக்கலை: சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறை சார்பில் 4 காமிராக்கள் அமைப்பு - இரவு பகலாக கண்காணிக்க நடவடிக்கை
- ரப்பர் பால் வெட்ட சென்ற போது சிறுத்தை குதித்து ஓடியது. பதறிப்போன ஹெலன்மேரி அங்கிருந்து ஓட்டம்
- நடமாட்டம் இருந்தது காட்டு பூனையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
நாகர்கோவில் :
தக்கலை அருகே வேலிமலை வன பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். சரல் விளை பகுதியைச் சேர்ந்த நெல்சன் என்பவரது மனைவி ஹெலன் மேரி (வயது 40). இவர், குழிவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்ட சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை ஒன்று குதித்து ஓடியது. பதறிப்போன ஹெலன்மேரி அங்கிருந்து ஓட்டம் பிடித்து நடந்த சம்பவத்தை பொது மக்களிடம் தெரிவித்தார்.
மேலும் கொரங்கேற்றி மலைப் பகுதியில் 3 குட்டிகளுடன் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிச்சிகல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததையும் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.இந்த நிலையில் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட பகுதிக்கு சென்றனர்.அந்த பகுதியில் 4 நவீன காமிராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், வேளிமலை வனப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். நடமாட்டம் இருந்தது காட்டு பூனையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய அந்த பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இரவு பகலாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து கேமராவில் கண்காணிக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்